உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பள்ளிப்பட்டில் நுாலுக்கு பசை சேர்ப்பு நிறுத்தம்

பள்ளிப்பட்டில் நுாலுக்கு பசை சேர்ப்பு நிறுத்தம்

பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு அருகே கொசஸ்தலை ஆறு பாய்கிறது. இந்த ஆறு, பெருமாநல்லுார், மேலப்பூடி, சொரக்காய்பேட்டை, புண்ணியம், சாமந்தவாடா வழியாக பாய்ந்து சென்று பூண்டி நீர்த்தேக்கத்தை அடைகிறது.இந்நிலையில், பள்ளிப்பட்டு சுற்றுப்பகுதியில், வெங்கல்ராஜகுப்பம், சொரக்காய்பேட்டை, பொதட்டூர்பேட்டை, நல்லவானம்பேட்டை, அத்திமாஞ்சேரிபேட்டை உள்ளிட்ட பகுதியில் நெசவு தொழில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நெசவுக்கு தேவையான பாவு நுாலுக்கு பசை சேர்த்து பதப்படுத்தும் பணி, சொரக்காய்பேட்டையில் நடக்கிறது. கொசஸ்தலை ஆற்றின் நீர்வளத்தால், நுாலுக்கு பதமான நிலையில் பசை கூடுகிறது. இதனால், பள்ளிப்பட்டு மற்றும் ஆர்.கே.பேட்டை ஒன்றியங்களை சேர்ந்த நெசவு நிறுவனங்கள், நுாலுக்கு பசை சேர்க்க சொரக்காய்பேட்டை நெசவாளர்களை நம்பியுள்ளனர்.கடந்த நான்கு வாரங்களாக பள்ளிப்பட்டு சுற்றுப்பகுதியில் தொடர்ந்து மழைப்பொழிவுடன், வானம் மேகமூட்டமாக காணப்படுவதால், பசை சேர்க்கப்பட்ட நுாலை வெயிலில் காய வைக்க முடியாமல், நெசவாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். நுால் காய வைக்கும் மைதானங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை