உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பொன்னேரியில் ஆகாயத்தாமரை கழிவுநீரால் பாழாகும் குளம்

பொன்னேரியில் ஆகாயத்தாமரை கழிவுநீரால் பாழாகும் குளம்

பொன்னேரி:பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட, கும்மமுனிமங்கலம் பகுதியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள குளம் பராமரிப்பு இன்றி கிடக்கிறது.குளத்தில் ஆகாயத்தாமரை, முட்செடிகள் சூழ்ந்து உள்ளன. குடியிருப்புகளின் கழிவுநீர் நேரிடையாக குளத்தில் விடப்படுகிறது. குப்பை கழிவுகளும் இங்கே கொட்டப்பட்டு குளம் பாழாகி வருகிறது.குளம் பராமரிப்பு இன்றி கிடப்பதால், மழைக்காலங்களில் தண்ணீர் தேக்கி வைக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. பொன்னேரி நகரப்பகுதியில் அமைந்துள்ள இந்த குளம் பராமரிப்பு இன்றி கிடப்பது, சமூக ஆர்வலர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:மேற்கண்ட குளத்தை முழுமையாக துார்வாரி, சீரமைத்து, மழைநீரை தேக்கி வைப்பதன் வாயிலாக நிலத்தடி நீர் பாதுகாக்க முடியும்.குடியிருப்புகளின் குப்பை மற்றும் கழிவுநீர் விடுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சுற்றிலும் நடைபாதை, சிறு பூங்கா உள்ளிட்டவை அமைத்தால் நடைபயிற்சி செய்பவர்களுக்கும், சிறுவர்களுக்கும் பயனுள்ளதாக அமையும். அதற்கான நடவடிக்கைகளில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை