| ADDED : மே 09, 2024 01:27 AM
கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம் விடையூர் பகுதிவாசிகளுக்கு, பேரம்பாக்கம் அடுத்த சகாயதோட்டம் டான் பாஸ்கோ வேளாண்மை கல்லுாரி மாணவியர், வேளாண் பணி குறித்த பயிற்சி அளித்தனர். இதில், ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தின் கீழ் கிராமப்புற மக்களுக்கு பங்கேற்பு மதிப்பீடு பயிற்சி அளித்தனர். இதில், கிராம வரைபடம், மக்களின் தினசரி செயல்பாடுகள் ஆகியவற்றை கேட்டறிந்தனர். அதன்பின், மேற்கொள்ள வேண்டிய வேளாண் பணிகள் குறித்து விளக்கி பேசினர். மேலும், கிராமத்தின் காலக்கோடு மற்றும் வெண் வரைபடம் ஆகியவற்றை வரைந்து, எத்தனை மணிக்கு என்னென்ன பணிகள் மேற்கொள்ள வேண்டுமென்பது குறித்து கிராமவாசிகளுக்கு விளக்கமளித்தனர்.