உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தனியார் விடுதியில் தங்கிய முதியவர் மயங்கி விழுந்து பலி

தனியார் விடுதியில் தங்கிய முதியவர் மயங்கி விழுந்து பலி

திருவள்ளூர்:சென்னை நங்கநல்லுார் பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், 70; திருமணமாகாதவர். இவர், கடந்த 28ம் தேதி நங்கநல்லுாரிலிருந்து 'மாருதி ஸ்விப்ட் டிசையர்' வாடகை காரில் திருப்பதி சென்று விட்டு, திருவள்ளூர் வந்து என்.என்.ரெசின்டென்சி என்ற தனியார் விடுதியில் தங்கியுள்ளார். பின், 30ம் தேதி காலை, தனியார் விடுதி அறைக்கு சென்று கார் ஓட்டுனர் பார்த்தபோது, ராமகிருஷ்ணன் மயங்கி நிலையில் கிடந்துள்ளார். அவரை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து உறவினர் சிவராமகிருஷ்ணன் கொடுத்த புகாரின்படி, திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை