உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தொழிலாளியை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது

தொழிலாளியை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம், வெங்கத்துார் ஊராட்சி மணவாளநகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரித்விராஜ், 49. தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இவர் கடந்த 2ம் தேதி வேலை முடிந்து இரவு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார் அப்போது மணவாள நகர் அடுத்த வெங்கத்துார் கண்டிகை பகுதியில் சாலையை கடக்க முயன்றபோது ஆட்டோ ஒன்று வேகமாக வந்து மோதுவது போல் நின்றது. இதையடுத்து பிரித்விராஜ் 'ஏன் இப்படி வேகமாக வருகிறீர்கள்' என கேட்டார். இதில் ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுனர் சரவணன் பிரித்திவிராஜை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்து சென்றார். இதுகுறித்த புகாரின்படி வழக்கு பதிந்த மணவாளநகர் போலீசார் சரவணனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ