மேலும் செய்திகள்
சுத்தமான குடிநீர் வழங்க முடியாத அரசு
14 hour(s) ago
100 நாள் வேலைக்கு கட்டிங் :கலெக்டர் அலுவலகத்தில் மனு
15 hour(s) ago
பவானியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
29-Dec-2025
இன்று இனிதாக திருவள்ளூர்
29-Dec-2025
திருவள்ளூர்:திருவள்ளூர் - பூண்டி கூட்டுச்சாலையில் விபத்தை தவிர்க்கும் வகையில், ஒளிரும் பலகை மற்றும் தானியங்கி 'சிக்னல்' அமைக்கப்பட்டு உள்ளது.திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலையில், புல்லரம்பாக்கம், பூண்டி, சீத்தஞ்சேரி உட்பட, 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. திருவள்ளூர் பேருந்து நிலையத்தில், ஊத்துக்கோட்டை, பூண்டிக்கு ஏராளமான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.பூண்டி நீர்த்தேக்கத்திற்கு வார மற்றும் அரசு விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் பலரும் சுற்றுலா சென்று வருகின்றனர். பூண்டி நீர்த்தேக்கத்திற்கு செல்ல, திருவள்ளூரில் இருந்து 10 கி.மீட்டர் துாரத்தில் திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலையில் கூட்டுச்சாலை உள்ளது. சாலையின் இடதுபுறம் பூண்டியும், வலதுபுறம் நெய்வேலி கிராமத்திற்கும் சாலை பிரிகிறது. நான்கு சாலை சந்திக்கும் இடத்தில், அவ்வப்போது விபத்துகள் ஏற்பட்டு, பலரும் காயமடைந்து வருகின்றனர்.இதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட போலீசார், பூண்டி கூட்டுச்சாலையில் விபத்தை தவிர்க்கும் வகையில், இரவிலும் ஒளிரும் 'சிக்னல்' பலகை மற்றும் தானியங்கி 'சிக்னல்' அமைத்துள்ளனர்.இதன் காரணமாக, இரவு நேரத்தில் ஏற்படும் விபத்து தவிர்க்கப்படும் என, போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.
14 hour(s) ago
15 hour(s) ago
29-Dec-2025
29-Dec-2025