| ADDED : மே 23, 2024 11:47 PM
திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து வெளிநாட்டிற்கு வேலை மற்றும் படிக்க விண்ணப்பிக்கும் இளைஞர்கள் மற்றும் மாணவ - மாணவியருக்கு. திருவள்ளூர் மாவட்ட காவல்துறை விழிப்புணர்வுடன் விண்ணப்பிக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து மாவட்ட எஸ்.பி., சீனிவாச பெருமாள் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:வெளிநாட்டு வேலை மற்றும் படிப்புக்கு விண்ணப்பிக்கும் நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்றதா என்பதை உறுதி செய்ய வேண்டும். அதன்பின், கல்வி தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்ப கட்டணம் மற்றும் முதலீடுகள் செலுத்துவதை கவனமுடன் மேற்கொள்ள வேண்டும். ஆசைவார்த்தைகள் கூறி விளம்பரப்படுத்தும் போலி நிறுவனங்களை நம்பி கல்வி தொடர்பான ஆவணங்கள் மற்றும் தொகை செலுத்துவதை தவிர்க்க வேண்டும். இந்த நிறுவனங்களால் வெளிநாட்டில் வேலை மற்றும் கல்லுாரிகளில் சேர வாய்ப்புகள் வாங்கித்தர அலைக்கழிக்கப்படும்போது, இந்நிறுவனங்களுக்கு அளித்த ஆவணங்கள் மற்றும் முதலீடுகள் திரும்ப பெறுவதை கடினமான பணியாகும். மேலும், இந்த பரிமாற்றத்திற்கு முறைப்படி சிவில் நீதிமன்றத்தை அணுகி தீர்வு காண வேண்டி உள்ளதால், காலதாமதம் ஏற்பட்டு பெரும் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இளைஞர்கள், மாணவ - மாணவியர் மற்றும் பெற்றோர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.