உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஆக்கிரமிப்பில் நீர்வரத்து கால்வாய்கள் ஜமாபந்தியில் பா.ஜ., கவுன்சிலர் மனு

ஆக்கிரமிப்பில் நீர்வரத்து கால்வாய்கள் ஜமாபந்தியில் பா.ஜ., கவுன்சிலர் மனு

திருத்தணி:திருத்தணி தாசில்தார் அலுவலகத்தில் நடந்து வரும் ஜமாபந்தி நிகழ்ச்சியில் திருவாலங்காடு ஒன்றியம், ஆற்காடுகுப்பம் பா.ஜ., ஒன்றிய கவுசல்யா சரவணன் நேற்று வருவாய் கோட்டாட்சியர் தீபாவிடம் கோரிக்கை மனு கொடுத்தார். மனுவில் கூறியிருப்பதாவது: ஆற்காடுகுப்பம் ஏரிக்கு வரும் கசிவுநீர் வரத்து கால்வாயை தனிநபர் ஒருவர் புதைத்து மண்சாலையாக மாற்றியுள்ளார். அதே போல் லட்சுமாபுரம் கொசஸ்தலை ஆற்றில் இருந்து ஆற்காடுகுப்பம் ஏரிக்கு வரும் நீர்வரத்து கால்வாய், 300 அடி அகலம், ஒரு கிலோ மீட்டர் நீளத்திற்கு உள்ள கால்வாய் ஆக்கிரமிப்புகளால் தற்போது, 15 அடி அகலமாக சுருங்கியுள்ளன. இதனால் ஏரிக்கு நீர்வரத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் ஏரி தண்ணீர் நிரம்புவதில்லை. இதனால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. பலமுறை புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கை இல்லை. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரிக்கு தண்ணீர் கொண்டு வரவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து கோட்டாட்சியர் தீபா, உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாசில்தார், துணை தாசில்தார் ஆகியோருக்கு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி