| ADDED : ஆக 06, 2024 10:41 PM
திருத்தணி:திருத்தணி ஒன்றியத்தில் 27 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு மூன்று இடங்களில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெறுகிறது. இது குறித்து திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தானம் கூறியதாவது:திருத்தணி ஒன்றியம் மத்துார் ஊராட்சியில் கொத்துார் சமுதாய கூடத்தில் இன்று காலை, 9:00 மணிக்கு மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெறுகிறது. நாளை, 8 ம் தேதி கார்த்திகேயபுரம் ஊராட்சியில், அரக்கோணம் சாலையில் உள்ள ஏ.வி.எஸ்., தனியார் திருமண மண்டபத்திலும், வரும் 9ம் தேதி, புச்சிரெட்டிப் பள்ளி ஊராட்சியில் மேல் திருத்தணி ராஜூலு திருமண மண்டபத்திலும் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெறுகிறது. ஒவ்வொரு முகாமில் ஒன்பது ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் தங்களது குறைகளையும், அரசு நலதிட்ட உதவிகள் பெறவும் மனு அளிக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.