உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கடற்கரைகளில் தொடரும் உயிரிழப்பு

கடற்கரைகளில் தொடரும் உயிரிழப்பு

திருவொற்றியூர்: திருவொற்றியூரில், நல்லதண்ணீர் ஓடை குப்பம், திருச்சிணாங்குப்பம், ஒண்டிக்குப்பம், கிளிஜோசியம் நகர், திருவொற்றியூர் குப்பம், கே.வி.கே., குப்பம்.எண்ணுாரில், பாரதியார் நகர், சின்னகுப்பம், தாழங்குப்பம், முகத்துவாரகுப்பம் ஆகிய பகுதிகளில், கடற்கரைகள் உள்ளன.வெயில் நேரங்களில், வரும் மக்கள், குடும்பத்துடன் பொழுதை போக்கி செல்வர். சில நேரங்களில், பள்ளிக் கல்லுாரி மாணவ - மாணவியர், நண்பர்களுடன் சேர்ந்து வந்து கடற்கரையில் ஆனந்த குளியல் போடுவதுண்டு.மேலும், காதலர்கள் அதிகளவில் கூடும் இடமாகவும், இந்த கடற்கரைகள் உள்ளன. இந்நிலையில், கண்காணிப்பு குறைவு காரணமாக, அடிக்கடி கடல் அலையில் சிக்கி உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே அப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள உயர் கோபுரங்களில் இருந்து, கண்காணிப்புகளை தீவிரப்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை