உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கோனேட்டம்பேட்டையில் பள்ளி எதிரே விபத்து அபாயம்

கோனேட்டம்பேட்டையில் பள்ளி எதிரே விபத்து அபாயம்

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டில் இருந்து நகரி செல்லும் சாலையில் அமைந்துள்ளது கோனேட்டம்பேட்டை கிராமம். இந்த கிராமத்தில் பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. அரசு மருத்துவமனை எதிரே, நிதியுதவி பெறும் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. தொடக்கப் பள்ளிக்கு எதிரே, தார் சாலையின் குறுக்கே நீர்வரத்து கால்வாய் பாய்கிறது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் தடுப்பு சுவர் இடிந்துள்ளது.தார்சாலையை ஒட்டி புதர் மண்டிக்கிடக்கும் நிலையில், அந்த புதரில் வரத்து கால்வாய் திறந்த நிலையில் கிடப்பது பார்வைக்கு புலப்படுவது இல்லை. இதனால், அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. இதனால், பள்ளிக்கு வரும் மாணவர்களும் அச்சத்தில் தவித்து வருகின்றனர். மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதி, திறந்தநிலையில் உள்ள பாலத்திற்கு மேல்தளம் அமைக்கவும், எச்சரிக்கை பதாகை நடவும் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை