உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / காந்தி கிராமத்தில் பேருந்து நிறுத்த கோரிக்கை

காந்தி கிராமத்தில் பேருந்து நிறுத்த கோரிக்கை

பாண்டூர்:சென்னை - -- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருவள்ளூர் அடுத்து அமைந்துள்ளது காந்திகிராமம். இங்கு இருளர் இனத்தை சேர்ந்த 800க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.இந்த கிராமவாசிகள் பேருந்து வாயிலாக சென்னை, திருவள்ளூர், திருத்தணி உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று வருகின்றனர்.அவ்வாறு செல்வோர் காந்திகிராமத்தில் பேருந்து நிறுத்தம் இல்லாததால் 3 கி.மீ., தூரமுள்ள புதுார் அல்லது ராமஞ்சேரியில் இருந்து இறங்கி நடந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.மேலும் பள்ளி செல்லும் ஏழை மாணவர்கள் நடந்து சென்று வர சிரமப்படுகின்றனர். மேலும் முதியவர்கள் பெண்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.இந்நிலையில் திருத்தணி -- திருவள்ளூர் வரை இயக்கப்படும் அரசு பேருந்து தடம் எண்: 97 மற்றும் தனியார் பேருந்துக்களை காந்தி கிராமத்தில் நிறுத்தி இயக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் நிழற்குடை அமைக்க வேண்டும் என, எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை