உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பொன்னேரியில் ஹரி - ஹரன் சந்திப்பு உற்சவம் விமரிசை அரிய நிகழ்வை கண்டு பக்தர்கள் பரவசம்

பொன்னேரியில் ஹரி - ஹரன் சந்திப்பு உற்சவம் விமரிசை அரிய நிகழ்வை கண்டு பக்தர்கள் பரவசம்

பொன்னேரி: பொன்னேரி, திருஆயர்பாடியில் உள்ள சவுந்தர்யவல்லி தாயார் சமேத கரிகிருஷ்ண பெருமாள் கோவில் சித்திரை பிரம்மோற்சவ விழா, கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.தொடர்ந்து, சிம்மவாகனம், சூரியபிரபை, சந்திரபிரபை, அனுமந்த வாகனம், புன்னவாகனம், சேஷவாகனம், அன்னவாகனம் ஆகிய உற்சவங்களும், திருவீதி உலாவும் நடைபெற்றன.விழாவின் ஐந்தாம் நாளான நேற்று முன்தினம் காலை நாச்சியார் திருக்கோலம், மாலையில் ஊஞ்சல் சேவை உற்சவங்கள் நடந்தன.பொன்னேரி அகத்தீஸ்வர பெருமானும், கரிகிருஷ்ண பெருமானும், ஒருசேர சந்தித்து பக்தர்களுக்கு காட்சி தரும் சந்திப்பு திருவிழா' நள்ளிரவு 12:00 மணிக்கு துவங்கியது.விடிய விடிய சந்திப்பு உற்சவ விழா விமரிசையாக நடந்தது.நேற்று அதிகாலை 5:00 மணிக்கு கருட வாகனத்தில் புறப்பட்ட கரிகிருஷ்ண பெருமாள், ஹரிஹரன் பஜார் வீதியில், தேரடி முனையில் நிலை கொண்டார்.மறுமுனையில் பஞ்ச மூர்த்திகளுடன் சேஷ வாகனத்தில் அகத்தீஸ்வரர் பெருமான் வீற்றிருந்தார். மங்கள வாத்தியங்கள் முழங்க, அகத்தீஸ்வரர் மற்றும் கரிகிருஷ்ண பெருமாளுக்கு தாம்பூலங்கள் மாற்றப்பட்டு, பட்டாச்சாரியர்கள், சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் ஓத, கற்பூர தீபாராதனைகள் காட்டப்பட்டன. வாண வேடிக்கைகள் பக்தர்களை மெய்சிலிர்க்க செய்தன.நேற்று காலை 6:00 மணிக்கு, கரிகிருஷ்ண பெருமாள், அகத்தீஸ்வரர் இருவரும் ஒரே சமயத்தில் எழுந்தருளி, கோதண்டராமன் சன்னிதியில், பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள அகத்திய பரத்வாஜ முனிவர்களின் முன்னிலையில் சந்தித்து ஒருசேர பக்தர்களுக்கு காட்சிஅளித்தனர்.ஹரியும், ஹரனும் சந்தித்த போது, கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், 'ஓம் நமசிவாயா... ஓம் நமோ நாராயணா... கோவிந்தா... கோவிந்தா' என பக்திப் பரவசத்துடன் கோஷங்களை எழுப்பினர். இதைஅடுத்து, அகத்தீஸ்வரர் பஞ்ச மூர்த்திகளுடனும், கரிகிருஷ்ண பெருமாளும் மாட வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை