மேலும் செய்திகள்
புறநகர் மின்சார ரயில்களில் அரிசி கடத்தல் அதிகரிப்பு
20 hour(s) ago
பறிமுதல் வாகனங்கள் வீணாகி வரும் அவலம்
20 hour(s) ago
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை தாலுகா, பாலவாக்கம் ஏரியில் அதிகளவு மணல் எடுப்பதை தடுக்க வேண்டும் என, தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஆஞ்சநேயலு, துணை தலைவர் ஞானப்பழனி உள்ளிட்ட குழுவினர் கலெக்டரிடம் மனு வழங்கினர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:தச்சூர் பகுதியில் இருந்து ஆந்திர மாநிலம் சித்துார் வரை ஆறுவழிச் சாலை பணி நடந்து வருகிறது. இந்த சாலை பணிக்காக ஊத்துக்கோட்டை தாலுகா, பாலவாக்கம் ஏரியில் இருந்து மணல் எடுக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஆனால், இங்கு அரசு விதிமுறையை மீறி அதிகளவு ஆழத்தில் மணல் எடுக்கப்படுகிறது. இதனால், நீர்மட்டம் பாதித்து குடிநீர் பிரச்னை ஏற்படும் நிலை உள்ளது.இங்கிருந்து மணல் எடுத்து செல்லும் லாரிகள் அசுர வேகத்தில் செல்வதால், அவ்வழியே உள்ள பள்ளிகளில் இருந்து வெளியே வர மாணவர்கள் அச்சப்படுகின்றனர். விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், ஏரியில் இருக்கும் பனைமரங்கள் சூறையாடப்படுகின்றன. ஏரியில் இருந்து எத்தனை லாரிகள் மணல் எடுத்து செல்கிறது என்ற கணக்கு எதுவும் இல்லை. எனவே, அதிகாரிகள் ஆய்வு செய்து, மணல் எடுப்பதை தடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
20 hour(s) ago
20 hour(s) ago