உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / எல்லப்பநாயுடு பேட்டையில் தொடர் மின்வெட்டால் அவதி

எல்லப்பநாயுடு பேட்டையில் தொடர் மின்வெட்டால் அவதி

பூண்டி:பூண்டி ஒன்றியம், எல்லப்பநாயுடுபேட்டை, குண்ணவலம், ராமஞ்சேரி, கனகம்மாசத்திரம் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களுக்கு ராமஞ்சேரி துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் செய்யப்படுகிறது. மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக மாதத்தில் ஒரு நாள் மின் தடையும் செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த, 20 நாட்களுக்கு மேலாக எவ்வித முன் அறிவிப்பும் இன்றி அடிக்கடி மின் வெட்டு ஏற்படுகிறது.இதுகுறித்து எல்லப்பநாயுடுபேட்டை பகுதிவாசிகள் கூறியதாவது: சாதாரணமாக காற்று வீசினாலே மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. மின் அலுவலகத்தை தொடர்பு கொண்டால் மின்மாற்றியில் பழுது, மரக்கிளை கம்பி மீது விழுந்து அறுந்து விட்டது போன்ற காரணங்களை கூறுகின்றனர். தினமும் மாலை, 3:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. மறுபடியும் இரவில் 10 நிமிடத்திற்கு ஒரு முறை 20 முதல் 30 நிமிடம் வரை மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இதனால் இரவில் தூங்க முடியாமல் மாணவர்கள், முதியவர்கள் தவிக்கின்றனர். எனவே அறிவிக்கப்படாத மின்வெட்டை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ