உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மதுக்கூட ஊழியரை தாக்கி மிரட்டல் விடுத்த நால்வர் கைது

மதுக்கூட ஊழியரை தாக்கி மிரட்டல் விடுத்த நால்வர் கைது

திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த போளிவாக்கம் பகுதியில் டாஸ்மாக் பாரில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஆனந்த், 38, என்பவர் கடந்த 4 மாதங்களாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 18- ம் தேதி இரவு வேலை முடிந்து அங்குள்ள ஹோட்டலில் சாப்பிடுவதற்காக ஸ்ரீபெரும்புதூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்து நான்கு பேர் ஆனந்தை வழிமறித்து ஆபாசமாக பேசி சரமாரியாக தாக்கி, பணம் கேட்டு மிரட்டி கொலை மிரட்டல் விடுத்துச் சென்றனர்.இதுகுறித்து ஆனந்த் கொடுத்த புகாரின்படி வழக்கு பதிந்த மணவாளநகர் போலீசார் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த பிரவீன், 25, ஆவடி சந்தோஷ், 25 மற்றும் 16, 17 வயதுடைய சிறுவர்கள் இருவர் என நான்கு பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை