உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நெடுஞ்சாலையோரம் குவியும் குப்பை

நெடுஞ்சாலையோரம் குவியும் குப்பை

கடம்பத்துார்:திருவள்ளூர் அடுத்துள்ளது திருப்பாச்சூர். இப்பகுதியில் உள்ள கொண்டஞ்சேரி நெடுஞ்சாலை வழியே தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.இப்பகுதியில் உள்ள நெடுஞ்சாலையோரம் குப்பை முறையாக அகற்றப்படாமல் மலைபோல் குவிந்து வருகிறது. இந்த குப்பையில் கால்நடைகள் இரை தேடுவதால் ஏற்படும் துர்நாற்றத்தால், வாகனங்களில் செல்பவர்கள் அவதிப்படுவதோடு தொற்று நோய் அபாயத்திற்கும் ஆளாகின்றனர்.மேலும் கால்நடைகள் திடீரென்று ஓடி வரும் போது விபத்தில் சிக்கும் நிலையும் ஏற்படுகிறது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை