உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் முதிர்வு தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் முதிர்வு தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூர்:முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் விண்ணப்பித்து, 18 வயது நிரம்பியோர், முதிர்வு தொகை பெற விண்ணப்பிக்கலாம்.திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:சமூக நல துறையின் வாயிலாக, முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து, தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்திடம் வைப்பு தொகை ரசீதுகள் பெற்று 18 வயது நிரம்பிய பயனாளிகள், முதிர்வுத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம். பயனாளிகளின் தங்கள் பகுதியில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் சமூக நல அலுவலர்களிடம், சேமிப்பு பத்திரத்தின் அசல் மற்றும் நகல்.பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம், வங்கி கணக்கு எண் விவரம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட சமூகநல அலுவலகத்தை நேரில் அல்லது 044 -29896049 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை