மேலும் செய்திகள்
தி.மு.க., நிர்வாகி பதவி நீக்கம்
6 hour(s) ago
சாலையோரம் மண் குவியல் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
6 hour(s) ago
வாலிபர் வெட்டிக்கொலை மர்ம நபர்கள் வெறிச்செயல்
6 hour(s) ago
பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு அருகே மண் மற்றும் கல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த குவாரிகளில் இருந்து மண், கல், ஜல்லிகற்களை ஏற்றி செல்லும் லாரிகள், விதிமுறைகளை முறையாக பின்பற்றுவது இல்லை. தார்பாய் மூடாமல் மண் ஏற்றி செல்வது, வாகனத்திற்கு அனுமதிக்கப்பட்ட அளவையும் மீறி ஜல்லிகற்களை கொண்டு செல்வது என வரைமுறையின்றி இயக்கப்படுகின்றன. இதனால், இந்த பகுதியில் பயணிக்கும் இதர வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் நேற்று பள்ளிப்பட்டில் இருந்து அத்திமாஞ்சேரிபேட்டை மார்க்கமாக ஜல்லிகற்கள் ஏற்றி வந்த லாரி ஒன்று, அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி வந்ததில், கர்லம்பாக்கம் அருகே சாலையில் ஜல்லிகற்கள் ஏராளமாக சிதறின. சிதறிய ஜல்லிகற்களால் அந்த வழியாக பயணித்த இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அவதிப்பட்டனர். வருவாய்த் துறை மற்றும் போலீசார் இந்த வாகனங்களை கண்காணிக்க வேண்டும் என பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago