மேலும் செய்திகள்
மக்கள் கட்டிய ரேஷன் கடை 3 ஆண்டாக வீணாகும் அவலம்
4 hour(s) ago
இன்று இனிதாக ....(06.10.2025) திருவள்ளூர்
4 hour(s) ago
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி பகுதியில், நேற்று அதிகாலை 2:30 மணியளவில் பலத்த சூறாவளி காற்று வீசியது. 15 நிமிடங்கள் நீடித்த சூறாவளி காற்றால், மின் கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசியதாலும், மின் பாதைகளில் மரக்கிளைகள் உரசியதாலும் மின் துண்டிப்பு ஏற்பட்டது. கும்மிடிப்பூண்டி, சித்தராஜகண்டிகை, பெத்திக்குப்பம், தேர்வழி உள்ளிட்ட ஏராளமான பகுதிகளில் மின்சாரம் இன்றி மக்கள் பாதிக்கப்பட்டனர்.அதிகாலை, 5:00 மணி முதல் காலை 11:00 மணி வரை படிப்படியாக மின் பாதையில் ஏற்பட்ட பழுதுகள் சரிசெய்யப்பட்டு, மின் வினியோகம் செய்யப்பட்டது.அதிகாலை நேரத்தில் துாக்கமின்றி, ஆழ்துளை மின் மோட்டார் இயக்க முடியாமல், பரபரப்பான காலை நேரத்தில் தண்ணீரின்றி கும்மிடிப்பூண்டி பகுதி வாசிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். ஊத்துக்கோட்டை
ஊத்துக்கோட்டையில் நேற்று முன்தினம் அதிகாலை 3:00 மணிக்கு திடீரென சூறைக்காற்று வீசியது. இதன் காரணமாக மின்சாரம் நிறுத்தப்பட்டது.ஆனால், வெயிலின் தாக்கம் வெகுவாக குறைந்தது. வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு, நேற்று வெப்பம் தணிந்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.
4 hour(s) ago
4 hour(s) ago