| ADDED : ஏப் 30, 2024 03:25 AM
பள்ளிப்பட்டு : பள்ளிப்பட்டு பஜார் தெருவில் ராமசுப்ரமணியம் என்பவரின் மளிகை கடை உள்ளது. இவர், நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார்.நள்ளிரவில், இருசக்கர வாகனத்தில் தலைகவசம் அணிந்து வந்த இருவர், இவரது கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். கடையில் பணம் ஏதும் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் வெளியே வந்தனர்.அதன்பின், அருகில் உள்ள குணா என்பவரின் மொபைல் கடையின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே நுழைந்தனர். அங்கும் பணம் ஏதும் கிடைக்காததால், பழுது பார்க்க வந்த இரண்டு மொபைல் போன்களுடன் தப்பிச் சென்றனர்.இதையடுத்து, கொள்ளையர்கள் வந்து சென்ற காட்சி, அந்த பகுதியில் உள்ள 'சிசிடிவி' கேமராவில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து நேற்று மாலை வரை போலீசாருக்கு புகார் ஏதும் வரவில்லை.இந்த கொள்ளை முயற்சி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வியாபாரிகள் மற்றும் பகுதிவாசிகள் கடும் அச்சத்தில் உள்ளனர்.