உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மானிய விலையில் கடலை விதைகள் பெற அழைப்பு

மானிய விலையில் கடலை விதைகள் பெற அழைப்பு

திருத்தணி, திருத்தணி ஒன்றியத்தில் விவசாயிகள் நெல், கரும்பு, வேர்க்கடலை, காய்கறி மற்றும் பூ போன்ற பயிர்கள் அதிகளவில் பயிரிடுகின்றனர்.தற்போது, வேர்க்கடலை மற்றும் நெல் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுவதால், வேளாண் துறை சார்பில் மானிய விலையில் விதைகள் வழங்கப்படுகின்றன.இதுகுறித்து திருத்தணி வேளாண் உதவி இயக்குனர் பிரேம் கூறியதாவது:திருத்தணி மற்றும் கே.ஜி.கண்டிகையில் இயங்கி வரும் வேளாண் விரிவாக்க மையத்தில், 'டி.எம்.வி---., 14 மற்றும் கே.வி---., 1812' என்ற இரண்டு ரக வேர்க்கடலை விதைகள் விற்பனைக்கு உள்ளன.ஒரு கிலோ வேர்க்கடலை, 96 ரூபாய். இதில் விவசாயிகளுக்கு, 1 கிலோவிற்கு, 40 ரூபாய் மானியம் மற்றும் உயிரி உரம் வழங்கப்படுகிறது.அதேபோல், சிறுதானியமான கம்பு விதைகள், 'ஏ.டி.டி-., 54, ஏ.டி.டி-., 37' மற்றும் வெள்ளை பொன்னி போன்ற நெல் விதைகளும் மானிய விலையில் வழங்கப்படுகின்றன.மேலும், விவசாயிகள் உழவன் செயலி மூலம் தமிழ் மண்வளம் இணையதளம் வாயிலாக தங்களது மண்வளம் பார்க்கவும், உரம், ஊட்டச்சத்து போன்ற தகவல்களும் பெறலாம். இதில், சந்தேகம் இருப்பின், வேளாண் உதவி இயக்குனரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை