| ADDED : ஜூலை 15, 2024 11:17 PM
கும்மிடிப்பூண்டி: சென்னைக்கு கூடுதல் குடிநீர் வழங்கும் திட்டத்திற்காக, கும்மிடிப்பூண்டி அருகே, கண்ணன்கோட்டை மற்றும் தேர்வாய் கண்டிகை ஏரிகளை இணைத்து, 1,100 ஏக்கர் பரப்பளவில், நீர்த்தேக்கம்ஏற்படுத்தப்பட்டது. அந்த நீர்த்தேக்கம், 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் பயன்பாட்டிற்கு வந்தது.பூண்டிக்கு செல்லும் கிருஷ்ணா கால்வாயில் இருந்து, தனியாக ஏற்படுத்தப்பட்ட கால்வாய் வழியாக கிருஷ்ணா நதி நீர் தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்தை வந்தடைகிறது.தேர்வாய் கண்டிகை நீர் தேக்கத்தின் முழு கொள்ளவான, 36.61 அடி ஆழத்தில், 0.5 டி.எம்.சி., தண்ணீர் சேமிக்கும் வசதி கொண்டது.தொடர்ந்து மூன்று நாட்களாக மழை பெய்து வருவதால் தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம் நிரம்பி வருகிறது.நேற்று காலை நிலவரப்படி, 30.63 அடி ஆழத்திற்கு, 0.313 டி.எம்.சி., கொள்ளவுதண்ணீர் இருப்பு உள்ளது.