உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வரமூர்த்தீஸ்வரர் கோவிலில் 23ல் கும்பாபிஷேக விழா

வரமூர்த்தீஸ்வரர் கோவிலில் 23ல் கும்பாபிஷேக விழா

கும்மிடிப்பூண்டி:அரியதுறை வரமூர்த்தீஸ்வரர் கோவிலில், வரும் 23ம் தேதி கும்பாபிஷேக விழா நடக்கிறது.திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அடுத்த அரியதுறை கிராமத்தில், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்று சிறப்பு மிக்க மரகதவல்லி சமேத வரமூர்த்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.காசிக்கு நிகராக போற்றப்படும் வரமூர்த்தீஸ்வரர் கோவிலில் வரும் 23ம் தேதி மஹா கும்பாபிஷேக விழா நடக்கிறது.நாளை, 19ம் தேதி, கணபதி, லட்சுமி, நவக்கிரக பூஜைகளுடன் விழா துவங்குகிறது. தொடர்ந்து யாகசாலை அமைத்து நான்கு கால பூஜைகள் நடைபெற உள்ளன. கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சரவணன், அருண்குமார் குருக்கள், கிராம மக்கள், உபயதாரர்கள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை