| ADDED : மே 24, 2024 04:56 PM
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகம் அருகே சமுதாய கூடம் உள்ளது. மணமேடை, கழிப்பறையுடன் மணமகன் மற்றும் மணமகள் அறை, பார்வையாளர் அரங்கு, வெளிப்புறத்தில் கழிவறை வசதிகள் உள்ளன.சமையல் அறை, டைனிங் ஹால் வசதி இல்லாததால், திருமண விழாக்கள் இங்கு நடைபெறுவது இல்லை. சில மணி நேரம் நடைபெறும் கட்சி, சங்க கூட்டங்கள், பிறந்தநாள் விழாக்கள் மட்டுமே நடைபெற்று வருகிறது.ஆகையால், சமையல் அறை, முதல் தளத்தில் டைனிங் ஹால் வசதி ஏற்படுத்த, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கூடுதல் வசதிகளை ஏற்படுத்தினால் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்வுகள் நடைபெற வழி வகுக்கும். அதன் வாயிலாக பேரூராட்சி நிர்வாகத்திற்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.