| ADDED : மே 30, 2024 12:28 AM
சோழவரம்:அசாம் மாநிலம், கத்காடி, கர்பிஅங்லாங் பகுதியைச் சேர்ந்தவர் ரபிகார்ம்கர், 31; கன்டெய்னர் லாரி டிரைவர். இவர், நேற்று முன்தினம் கர்நாடகா மாநிலம் பதிவு எண் கொண்ட கன்டெய்னர் லாரியில், கர்நாடாகவில் இருந்து சென்னைக்கு வந்துக் கொண்டிருந்தார்.நேற்று காலை 9:00 மணிக்கு, சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சோழவரம் அடுத்த செம்புலிவரத்திற்கு வந்தடைந்தவர், லோடு ஏற்றுவதற்காக அங்குள்ள சர்வீஸ் நிலையில் நிறுத்த முயன்றார்.அப்போது, லாரியின் மேற்பகுதி அங்கிருந்த உயரழுத்த மின் ஒயரில் உரசியது. இதனால், லாரியின் டயர் மற்றும் இன்ஜின் பகுதிகள் தீப்பிடித்து எரிந்தன.லாரி டிரைவர் ரபிகார்ம்கர் கீழே குதித்து தீயை அணைக்கு முயற்சியில் ஈடுபட்டார். அப்போது, எதிர்பாராதவிதமாக ரபிகார்ம்கர் தீயில் சிக்கி உயிரிழந்தார்.தகவல் அறிந்த செங்குன்றம் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதன் காரணமாக, அப்பகுதி முழுதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.சோழவரம் போலீசார், உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.மின்கம்பியில் உரசி கன்டெய்னர் லாரி தீப்பிடித்து எரிந்ததுடன், டிரைவரும் அதில் சிக்கி உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.