உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குப்பை எரிக்கும் இடமான மப்பேடு சுகாதார வளாகம்

குப்பை எரிக்கும் இடமான மப்பேடு சுகாதார வளாகம்

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது மப்பேடு ஊராட்சி. தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த ஊராட்சியிலிருந்து சுங்குவார்சத்திரம் செல்லும் நெடுஞ்சாலை உள்ளது.இந்த சாலை சந்திப்பு பகுதியில், 2013ம் ஆண்டு 4.50 லட்சத்தில் ஆண்கள் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. ஆனால், தற்போது வரை பயன்பாட்டிற்கு வராமல் பூட்டியே கிடக்கிறது. இதனால், இங்கு குப்பை கொட்டி எரிக்கப்படுகிறது. மேலும், இரவு நேரங்களில் 'குடி'மையமாக மாறி வருகிறது. இந்த சுகாதார வளாகம் பூட்டியே கிடப்பதால், மப்பேடு கூட்டுச் சாலைக்கு வரும் ஆண்கள் அடிப்படை வசதிகளுக்கு கூட கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.இதுகுறித்து பலமுறை பகுதிவாசிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லையென குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்நிலையில், தற்போது ஆண்கள் சுகாதார வளாகம் அருகே குப்பை கொட்டப்பட்டு எரிக்கப்பட்டு வருவது பகுதிவாசிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் ஆண்கள் சுகாதார வளாகத்தை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை