உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பேரூராட்சி செயல் அலுவலர் சஸ்பெண்ட்

பேரூராட்சி செயல் அலுவலர் சஸ்பெண்ட்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சியின் செயல் அலுவலராக குணசேகரன், 60, பணியாற்றி வந்தார். இவர், கடந்த மாதம் 28ம் தேதி, பணி ஓய்வு பெற இருந்தார்.இந்நிலையில், கடந்த 27ம் தேதியன்று, பேரூராட்சிகளின் துறை இயக்குனர் கிரண் குராலா, குணசேகரனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.ஸ்ரீபெரும்புதுாரில் பணியில் சேர்வதற்கு முன்பாக, இவர் பணியாற்றிய பேரூராட்சிகளில் நடந்த தணிக்கையில் கண்டறியப்பட்ட நிர்வாக குறைபாடுகள், குற்றச்சாட்டுகளை பணி ஓய்வு பெறும் வரை குணசேகரன் தீர்க்காமல் இருந்துள்ளார்.இவரது செயல்பாடுகளால், பேரூராட்சிகளுக்கு நிதி இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, பணி ஓய்வு பெறும் நாளுக்கு ஒரு நாள் முன்னதாக அவர் பணியிடை நீக்கம் செய்து, பேரூராட்சிகளின் துறை இயக்குனர் கிரண் குராலா உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி