உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தீ விபத்தில் காயமடைந்த மூதாட்டி பலி

தீ விபத்தில் காயமடைந்த மூதாட்டி பலி

கடம்பத்துார்:மப்பேடு அடுத்த இருளஞ்சேரி பகுதியைச் சேர்ந்வர் கல்யாணி, 74. கடந்த 30ம் தேதி இவர் வீட்டின் அருகில் குப்பையை தீ வைத்து எரித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக இவரது புடவையில் தீ பற்றிக் கொண்டது. இதில் படுகாயமடைந்த கல்யாணி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பலியானார்.இதுகுறித்து இவரது மகன் ரமேஷ் கொடுத்த புகாரின்படி மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ