| ADDED : மே 09, 2024 01:30 AM
திருத்தணி:திருத்தணி ஒன்றியம் அகூர் நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடமுனி, 42. இவர், தனியார் நிதிநிறுவனத்தில் ஏஜன்டாக செயல்பட்டு, பலரிடம் பணத்தை பெற்று தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தார்.கடந்த ஜனவரி 30ம் தேதி நான்கு பேர் காரில் வந்து, வெங்கடமுனியை கடத்திச் சென்றனர். இதுகுறித்து, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து மறுநாளே, கடத்தலில் ஈடுபட்ட கார்த்திக், நிர்மல்குமார் உட்பட மூன்று பேரை கைது செய்தனர்.மேலும், தலைமறைவாக இருந்த ராணிப்பேட்டை, சோளிங்கர் அடுத்த போளிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஹேம்பிரசாத், 20, என்பவரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.