மேலும் செய்திகள்
தி.மு.க., நிர்வாகி பதவி நீக்கம்
6 hour(s) ago
சாலையோரம் மண் குவியல் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
6 hour(s) ago
வாலிபர் வெட்டிக்கொலை மர்ம நபர்கள் வெறிச்செயல்
6 hour(s) ago
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு ஒன்றியங்களில் கைத்தறி நெசவு தொழிலில், 50 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர். கைத்தறி நெசவாளர்கள், கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக தொழில் வாய்ப்பு பெற்று நெசவு செய்து வருகின்றனர். கைத்தறி கூட்டுறவு சங்களுக்கு, இலவச வேட்டி, சேலை நெசவு செய்ய ஆண்டுதோறும் வாய்ப்பு வழங்கப்படுவது உண்டு. ஏப்., மே மாதங்களில் இதற்கான உத்தரவு சங்களுக்கு பிறப்பிக்கப்படும். அதன்படி, ஆணை பெற்ற சங்கங்கள், ஜன., மாதம் வரை உற்பத்தியை மேற்கொள்வது வழக்கம். ஆனால், நடப்பு ஆண்டில், இதுவரை கைத்தறி நெசவாளர் சங்கங்களுக்கு உற்பத்தி ஆணை வழங்கவில்லை. இதனால், கைத்தறி நெசவை நம்பியுள்ள நெசவாளர்கள் தொழில் வாய்ப்பு இன்றி முடங்கி கிடக்கின்றனர்.கடும் அதிருப்தியில் உள்ள நெசவாளர்கள் நேற்று ஆர்.கே.பேட்டையில் ஆலோசனை கூட்டம் நடத்தினர். கூட்டத்தில், கைத்தறி கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் நெசவாளர்கள் என நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.தொழில் வாய்ப்பு வழங்க அரசு முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். முறையான நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளப்படாத நிலையில், அடுத்த கட்ட போராட்டத்திற்கு ஆயத்தமாக இருக்க வேண்டும் என தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago