உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பயன்பாட்டிற்கு வந்தன பயணியர் நிழற்குடைகள்

பயன்பாட்டிற்கு வந்தன பயணியர் நிழற்குடைகள்

கடம்பத்துார்:திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட மேல்நல்லாத்துார், கீழ்நல்லாத்துார் ஊராட்சிகள்.இப்பகுதி வழியே அரசு, தனியார், பள்ளி, கல்லுாரி பேருந்து என தினமும் 5,000த்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.இப்பகுதியில் சாலை விரிவாக்கத்தின் போது பயணியர் நிழற்குடைகள் அகற்றப்பட்டன. இதையடுத்து ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே, 5 லட்சம் ரூபாய் மதிப்பில் மாவட்ட கவுன்சிலர் 2023 - -24ம் ஆண்டு மாவட்ட ஊராட்சி நிதியில் புதிய பயணியர் நிழற்குடை அமைக்கும் பணி துவங்கியது.இதேபோல் கீழ்நல்லாத்துார் பகுதியில் கடம்பத்துார் ஒன்றிய கவுன்சிலர் 2023-- 24ம் ஆண்டு ஒன்றிய பொது நிதியில், 5 லட்சம் மதிப்பில் நிழற்குடை அமைக்கும் பணி துவங்கியது.இந்நிலையில் இரு நிழற்குடை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டன. இது குறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து நடவடிக்கை எடுத்து இந்த பயணியர் நிழற்குடைகள் பணி நிறைவடைந்து பகுதிவாசிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்