உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மண்பாண்டம் தொழிலுக்கு வண்டல் மண் எடுக்க அனுமதி

மண்பாண்டம் தொழிலுக்கு வண்டல் மண் எடுக்க அனுமதி

திருவள்ளூர்:விவசாயம், மண்பாண்ட தொழிலுக்கு ஏரிகளில், களிமண், வண்டல்எடுக்க இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளூர் மாவட்டத்தில் நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 491 நீர்நிலைகளில் இருந்து களிமண், வண்டல் மற்றும் சாதாரண மண் போன்ற சிறுகனிமங்களை துார்வாரி கட்டணமில்லாமல் எடுத்துக் கொள்ள, அரசு அனுமதி அளித்துள்ளது. பொதுமக்களின் வேளாண்மை நோக்கம், மண்பாண்டம் மற்றும் வீட்டு உபயோக பயன்பாட்டிற்காக எடுத்துக்கொள்ள விரும்புவோர் சம்பந்தப்பட்ட வட்டாட்சியருக்கு tnesevai.tn.gov.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.மனுதாரரின் வசிப்பிடம் அல்லது வேளாண் நிலம் அமைந்துள்ள கிராமம் மற்றும் மண் மற்றும் வண்டல் மண் துார்வாரி எடுத்துச் செல்ல வேண்டிய நீர்நிலைகள் அமைந்துள்ள கிராமம் ஆகியவை, அதே வருவாய் வட்டத்தின் எல்லை வரம்பிற்குள் அமைந்திருக்க வேண்டும். துார்வாரப்படும் களிமண், வண்டல் மண், சாதாரண மண் ஆகியவற்றை, திருவள்ளூர் மாவட்ட நீர்வள ஆதார துறை செயற்பெறியாளர் முன்னிலையில், அனுமதி பெற்ற நபர் எடுத்து வரும் வாகனத்தில் ஏற்றிச் செல்ல வேண்டும். அனுமதி வழங்கப்பட்ட ஏரி வண்டல் மண்ணை பிற பயன்பாட்டிற்கு பயன்படுத்தக் கூடாது. மீறினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி