| ADDED : மே 01, 2024 01:22 AM
கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்துக்கு உட்பட்டது, மேல்நல்லாத்துார் ஊராட்சி. இங்குள்ள திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலை வழியே தினமும் அரசு, தனியார், தொழிற்சாலை, பள்ளி, கல்லுாரி பேருந்து என, 10,000த்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இங்குள்ள நெடுஞ்சாலையோரம் முக்குளத்தீஸ்வரர் கோவில் குளம் உள்ளது. இந்த குளக்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளன. இதனால், இவ்வழியே வாகனங்களில் செல்வோர் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.