உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவாலங்காடு அரசு பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்ட கோரிக்கை

திருவாலங்காடு அரசு பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்ட கோரிக்கை

திருவாலங்காடு:திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடில் அரசு மேல்நிலைப் பள்ளி 1968ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது.இந்த பள்ளியில் தற்போது 6 முதல் 12ம் வகுப்பு வரை 841 மாணவ -- மாணவியர் பயின்று வருகின்றனர்.36 வகுப்புகள் உள்ளன. ஆனால் 21 வகுப்பறை கட்டடம் மட்டுமே உள்ளதால் இரண்டு பிரிவு வகுப்பை சேர்ந்த மாணவர்களை ஒன்றாக அமர வைக்கப்படுகின்றனர் .மேலும் வகுப்பறை பற்றாக்குறையால் ஆய்வுக்கூடம் ஆசிரியர்களின் ஓய்வு அறை மரத்தின் அடியில் அமர வைக்கப்பட்டு கல்வி கற்க வேண்டிய நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.வகுப்பறை பற்றாக்குறை காரணமாக இக்கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது என ஆசிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே வரும் கல்வியாண்டில் இத்தகைய பாதிப்பை சந்திக்காமல் இருக்க மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய கட்டடம்அமைக்கவும், பழுதடைந்த கட்டடத்தை சீரமைக்கவும்கல்விதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை