உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / முகத்தை பதம் பார்க்கும் முட்செடிகள் கோளூர் சாலையில் அகற்ற கோரிக்கை

முகத்தை பதம் பார்க்கும் முட்செடிகள் கோளூர் சாலையில் அகற்ற கோரிக்கை

பொன்னேரி: பொன்னேரி அடுத்த மெதுார் கிராமத்தில் இருந்து வேம்பேடு, ஆவூர் வழியாக கோளூர் கிராமத்திற்கு செல்லும் சாலையின் ஓரங்களில் முட்செடிகள் வளர்ந்து உள்ளன.இவை சாலை வரை நீட்டிக்கொண்டு இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்களின் முகத்தில் பட்டு, சிராய்ப்புகள் ஏற்படுவதுடன், அவர்கள் தடுமாற்றத்திற்கு ஆளாகின்றனர். முட்செடிகளை தவிர்ப்பதற்காக இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையின் மத்தியில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்படுதால் அவர்கள் எதிரில் வரும் வாகனங்களால் விபத்தில் சிக்கு அபாயம் உள்ளது. மேலும், கார், பஸ் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள் எதிர் எதிரே சந்திக்கும்போது, வாகனங்கள் முட்செடிகளில் உரசியபடி செல்கின்றன. இதனால் வாகனத்தில் கீறல்கள் ஏற்படுகிறது.வாகன ஓட்டிகளின் சிரமம் கருதி, மெதுார் - கோளூர் சாலையின் ஓரங்களில் வளர்ந்துள்ள முட்செடிகளை முழுமையாக அகற்றவேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி