உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தொழுதாவூரில் ரேஷன் கடை கட்ட கோரிக்கை

தொழுதாவூரில் ரேஷன் கடை கட்ட கோரிக்கை

திருவாலங்காடு: திருவாலங்காடு ஒன்றியம் தொழுதாவூர் ஊராட்சியில், மேட்டுத்தெரு, கலைஞர் நகர், பழைய காலனி, பள்ளத்தெருவில், 400க்கும் மேற்பட்ட ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர்.இவர்களுக்கு அரசு நடுநிலைப் பள்ளி அருகே ரேஷன்கடை கட்டடம்இருந்த நிலையில் குட்டை புறம்போக்கில் கட்டடப்பட்டதால் இரண்டாண்டுக்கு முன் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இடித்து அகற்றப்பட்டது.அன்று முதல் ரேஷன்கடை அதே பகுதியில் உள்ள கிராம சேவை மையத்தில் இயங்கி வருகிறது.இந்த கட்டடத்தில் போதிய இட வசதி இல்லாமலும் பழுதடைந்த கட்டடமாக உள்ளதால் நுகர்வோர் பொருட்களை வாங்கி செல்ல அவதியடைந்து வருகின்றனர் .எனவே தொழுதாவூர் கிராமத்தில் புதிய ரேஷன் கடை கட்டடம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ