உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அரசு பள்ளிகளுக்கு நிதியுதவி வழங்க தொழிற்சாலைகளுக்கு வேண்டுகோள்

அரசு பள்ளிகளுக்கு நிதியுதவி வழங்க தொழிற்சாலைகளுக்கு வேண்டுகோள்

திருவள்ளூர்:''தனியார் தொழிற்சாலை நிறுவனங்கள், தங்களின் சமூக பொறுப்பு நிதியை அரசு பள்ளி மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு வழங்க முன்வர வேண்டும்,'' என, கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், 'நம்ம பள்ளி; நம்ம ஊரு பள்ளி' திட்டத்தின் கீழ், தனியார் தொழிற்சாலை நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதியிலிருந்து, அரசு பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதி பெறுவதற்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில், கலெக்டர் பிரபுசங்கர் பேசியதாவது:தனியார் நிறுவனங்களில் சமூக பொறுப்பு நிதியிலிருந்து, அரசு பள்ளியின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், 'நம்ம பள்ளி; நம்ம ஊரு பள்ளி' திட்டத்தை முதல்வர் துவக்கி வைத்துள்ளார்.இத்திட்டத்தின் மூலம் பள்ளிகளின் உட்கட்டமைப்பு, தற்காலிக ஆசிரியர்கள் நியமித்தல், கல்வி உபகரணங்கள், தளவாட பொருட்கள், விளையாட்டு உபகரணங்கள், புத்தகங்கள் ஆகியவை வழங்குவதற்கு, உங்கள் நிறுவனங்களில் சமூக பொறுப்பு நிதியிலிருந்து வழங்க வேண்டும். அரசு பள்ளி மற்றும் சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் செயல்படுத்தப்படும். அங்கன்வாடி மையங்களை மேம்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், உதவி கலெக்டர் - பயிற்சி, ஆயுஷ் குப்தா, முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்கள் ரவிச்சந்திரன், லிவிங்ஸ்டன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணி திட்ட அலுவலர் லலிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ