உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவாலங்காடில் துர்நாற்றம் குப்பை அகற்ற கோரிக்கை

திருவாலங்காடில் துர்நாற்றம் குப்பை அகற்ற கோரிக்கை

திருவாலங்காடு:திருவாலங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட தெற்கு மாட வீதி, சன்னிதி தெரு, பராசக்தி நகர், பவானி நகர், அம்பேத்கர் நகர் என 10க்கும் மேற்பட்ட நகரில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள், கடைகள் திருமண மண்டபங்கள் உள்ளன.இந்நிலையில் மேற்கண்ட பகுதியில் சேகரமாகும் குப்பையை தரம் பிரிக்க, தேவையற்றதை எரியூட்ட திருவாலங்காடு பி.டி.ஓ., அலுவலகம் அருகே குப்பை கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது.இதை சுற்றி ஆரம்ப சுகாதார நிலையம், வேளாண் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகம் மற்றும் குடியிருப்புகள் உள்ளன.இங்கு சேகரமாகும் குப்பையை சில மாதங்களாக அகற்றாமல் கிடங்கு முழுவதும் வீசப்பட்டு குப்பை மேடாக காட்சியளிக்கிறது. மேலும் திரவுபதி அம்மன் கோவில் அருகே, அம்பேத்கர் நகர் பகுதி என ஊராட்சியின் பல இடங்களிலும் குப்பை தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய்தொற்று பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக பகுதிவாசிகள் புலம்புகின்றனர்.கிராமத்தின் பல பகுதிகளில் தேங்கியுள்ள குப்பையை அகற்றி சீரமைக்கவும் மீண்டும் குப்பை தேங்காமல் இருக்கவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை