| ADDED : ஜூலை 12, 2024 09:28 PM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் இருந்து பாத்தப்பாளையம் கிராமம் வழியாக ஈகுவார்பாளையம் வரை செல்லும், 3 கி.மீ., சாலை, மாநில நெடுஞ்சாலை துறையின், கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தில் கீழ் உள்ளது. அந்த சாலையில் உள்ள தொழிற்சாலைகளுக்கு, தினசரி நுாற்றுக்கணக்கான அதிக எடை கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன.அதனால், சாலையின் பல இடங்கள் சேமடைந்து, ஏராளமான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. தற்போது அந்த சாலை, படுமோசமான நிலையில் உள்ளது.அடுத்தடுத்து மழைக்காலம் வர இருப்பதால் அந்த சாலை மேலும் சேமடைந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். உடனடியாக நிதி ஒதுக்கி கனரக வாகனங்களின் போக்குவரத்துக்கு ஏற்றபடி சாலையை தரம் உயர்த்தி புதுப்பிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.