உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பாலவாக்கம் அரசு பள்ளிக்கு கழிப்பறை அமைக்க கோரிக்கை

பாலவாக்கம் அரசு பள்ளிக்கு கழிப்பறை அமைக்க கோரிக்கை

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அருகே, பாலவாக்கம் கிராமத்தில் உள்ளது ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி. இங்கு 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயில்கின்றனர். 120 ஆண்டுகள் பழமையான இப்பள்ளியில், ஐந்து வகுப்பறை கட்டடங்கள் உள்ளன. கழிப்பறை உள்ளது.கழிப்பறை கட்டி, 15 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில், சுவர்களில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனால் மாணவர்கள் அச்சத்துடன் கழிப்பறை செல்கின்றனர். தற்போது கோடை விடுமுறை விடுக்கப்பட்ட நிலையில், மாவட்ட நிர்வாகம் பாலவாக்கம் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு கழிப்பறை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை