உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திறப்பு விழாவிற்காக காத்திருக்கும் திருத்தணி சார் -- பதிவாளர் அலுவலகம்

திறப்பு விழாவிற்காக காத்திருக்கும் திருத்தணி சார் -- பதிவாளர் அலுவலகம்

திருத்தணி:திருத்தணி பழைய தாலுகா அலுவலக வளாகத்தில், சார்- - பதிவாளர் அலுவலகம் பழுதடைந்த கட்டடத்தில் இயங்கி வந்தது. மேலும் அலுவலகம் குறுகிய இடத்தில் இயங்கி வந்ததால் வாடிக்கையாளர்கள் கடும் சிரமப்பட்டு வந்தனர்.இதையடுத்து திருத்தணி பொதுப்பணித்துறையினர், பழுதடைந்த கட்டடத்தை இடித்து அகற்றினர்.தொடர்ந்து, அதே இடத்தில், 1.63 கோடி ரூபாயில் புதிய சார்- - பதிவாளர் அலுவலகம் கட்டும் பணி துவங்கி முழுமையாக முடிந்துள்ளது.கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பழைய சென்னை சாலையில் தனியார் வாடகை கட்டடத்தில் குறுகிய இடத்தில் திருத்தணி சார்- - பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது.எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய கட்டடத்தில் அலுவலகம் இயங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை