மேலும் செய்திகள்
தி.மு.க., நிர்வாகி பதவி நீக்கம்
9 hour(s) ago
சாலையோரம் மண் குவியல் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
9 hour(s) ago
வாலிபர் வெட்டிக்கொலை மர்ம நபர்கள் வெறிச்செயல்
9 hour(s) ago
பொன்னேரி:சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் பொன்னேரி ரயில் நிலையம் அமைந்து உள்ளது. இங்கிருந்து, தினமும் ஆயிரக்கணக்கான பயணியர் கல்வி, சுகதாரம், தொழில், வியாபாரம் உள்ளிட்டவைகளுக்காக சென்னை, கும்மிடிப்பூண்டி பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.பொன்னேரியை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ரயில் நிலையத்திற்கு இரு சக்கர வாகனங்களில் வரும் பயணியர் அவர்களது வாகனங்களை, அங்குள்ள வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு செல்கின்றனர்.இங்கு பைக்குகளுக்கு, 250 ரூபாயும், சைக்கிளுக்கு, 150 ரூபாயும் மாத கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதே சமயம் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் போதுமான கூரை வசதி இல்லை. அங்குள்ள ஒரே ஒரு கூரையும் ஓடுகள் உடைந்து சேதம் அடைந்து கிடக்கிறது.வாகனங்கள் திறந்தவெளியில் நிறுத்தி வைக்கப்படுவதால், மழை, வெயிலில் அவை பாழாகின்றன. வாகன நிறுத்துமிடத்தில், மேற்கூரை இல்லாததால், கட்டணம் கொடுத்து மழை, வெயிலில் நிறுத்துவதற்கு பதிலாக, பயணியர் சிலர் வெளி வளாகத்தில் மரங்களின் நிழல்களை தேடி நிறுத்திவிட்டு செல்கின்றனர்.இது போன்ற வாகனங்களுக்கு பாதுகாப்பற்ற சூழலும், அவ்வப்போது திருட்டு சம்பவங்களும் நடைபெறுகிறது. மேற்கண்ட வாகன நிறுத்துமிடத்தில் கூரைகள் அமைத்து, அங்கு நிறுத்தப்படும் வாகனங்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்திட ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago