உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / போலிப்பத்திரம் மூலம் நிலம் விற்பனை

போலிப்பத்திரம் மூலம் நிலம் விற்பனை

கடம்பத்துார்:திருவள்ளூர் அடுத்த பெரியகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோதி, 65. இவருக்கு கடம்பத்துார் ஒன்றியம் நுங்கம்பாக்கம் கிராமத்தில் வீட்டு மனை உள்ளது. இந்நிலையில், இவரது இடத்திற்கு அருகே சிலர் தடுப்பு வேலி அமைக்கும் போது இவரது இடத்தையும் சேர்த்து தடுப்பு வேலி அமைத்தனர்.தகவலறிந்த ஜோதி, சென்று விசாரித்த போது அங்கு பணியிலிருந்தவர்கள் இந்த இடம் சென்னையைச் சேர்ந்த டோமினிக் சேவியருக்கு சொந்தமான இடம் என, தகவல் அளித்தனர்.இதையடுத்து ஜோதி சேவியரிடம் கேட்ட போது, இந்த இடத்தை நாங்கள் வாங்கியுள்ளோம். என, தெரிவித்துள்ளார்.ஜோதி தொடர்ந்து விசாரித்தபோது, அந்த இடத்திற்கான பட்டா மற்றும் ஆவணங்கள் டோமினிக் சேவியர் பெயருக்கு மாறியது தெரிய வந்தது. தன் நிலத்தை அதிகத்துார் பகுதியைச் சேர்ந்த பாலையம்மாள், பாலன், பக்தவச்சலம், மூர்த்தி, பீட்டர் சக்ரவர்த்தி, நாகராஜன் ஆகிய ஆறு பேர் போலியாக பத்திரம் தயார் செய்து விற்பனை செய்ததாக ஜோதி கொடுத்த புகாரின்படி, மணவாள நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை