உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பள்ளி மாணவர்கள் அட்டகாசம் திணறும் அரசு பஸ் டிரைவர்கள்

பள்ளி மாணவர்கள் அட்டகாசம் திணறும் அரசு பஸ் டிரைவர்கள்

திருத்தணி:திருத்தணி தாலுகா, அருங்குளம், மாமண்டூர், வேலஞ்சேரி, நல்லாட்டூர், மத்துார், முருக்கம்பட்டு உள்பட, 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து உயர்கல்வி கற்பதற்காக தினமும், நுாற்றுக்கணக்கான மாணவர்கள் திருத்தணி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு அரசு பேருந்துகள் மூலம் வந்து செல்கின்றனர். காலை மற்றும் மாலை நேரத்தில் இயக்கப்படும் டி.71, டி7, டி.45, 97இ போன்ற அரசு பேருந்துகளில், பள்ளி மாணவர்கள் பயணம் செய்கின்றனர். பேருந்தில் போதிய இடவசதி இருந்தாலும், சில மாணவர்கள் படியில் தொங்கியவாறு ஆபத்தான பயணம் செய்கின்றனர்.டி.71 மற்றும் டி.45 ஆகிய அரசு பேருந்துகளில் மாணவர்கள் பேருந்தில், ஜன்னல், கூரை மற்றும் படியில் தொங்கியவாறு பயணம் செய்து அட்டுழீயத்தில் ஈடுபடுவதால் பேருந்து ஓட்டுனர் பேருந்தை இயக்காமல் சாலையோரம் நிறுத்தி விடுகின்றனர்.இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டி களும் கடும் சிரமப்படுகின்றனர். நேற்று டி.71 பேருந்தில் ஏறிய மாணவர்கள் ஜன்னல் கம்பிகள் மீது ஏறியதால், கம்பிகள் சேதமடைந்துள்ளன.திருத்தணி போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ