உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஜனப்பன்சத்திரம் சாலையில் வேகத்தடைகள் விபத்தை தவிர்க்க வர்ணம் பூசுவது அவசியம்

ஜனப்பன்சத்திரம் சாலையில் வேகத்தடைகள் விபத்தை தவிர்க்க வர்ணம் பூசுவது அவசியம்

ஊத்துக்கோட்டை, : ஊத்துக்கோட்டை -ஜனப்பன்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில், ஊத்துக்கோட்டை, தாராட்சி, பாலவாக்கம், சூளைமேனி, தண்டலம், பெரியபாளையம், கன்னிகைப்பேர், மஞ்சங்காரணை உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. மேலும், இணைப்பு சாலை வழியே, 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம், நாகலாபுரம், பிச்சாட்டூர், புத்துார், நகரி, ரேணிகுண்டா, திருப்பதி, கடப்பா, கர்நுால், நந்தியால், ஐதரபாத் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் மேற்கண்ட நெடுஞ்சாலை வழியே செல்கின்றன.தினமும், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றன. மாநில நெடுஞ்சாலை வசம் இருந்து இந்த சாலை இரண்டு ஆண்டுகளுக்கு முன் தேசிய நெடுஞ்சாலைத் துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. அதிகளவு போக்குவரத்து நிறைந்த இந்த சாலையை இதுவரை தேசிய நெடுஞ்சாலைத் துறை எவ்வித பணிகளையும் செய்யவில்லை. ஏற்கனவே இச்சாலையில் அதிகளவு சேதங்கள் உள்ளன. இதில் இந்த சாலையில் உள்ள வேகத்தடைகளில் வர்ணம் இல்லாததால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே, மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஊத்துக்கோட்டை - ஜனப்பன்சத்திரம் இடையே உள்ள வேகத்தடைகளுக்கு வர்ணம் பூச வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை