உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மாரடைப்பால் ஆசிரியர் உயிரிழப்பு

மாரடைப்பால் ஆசிரியர் உயிரிழப்பு

திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த சென்றாயன்பாளையம் கிராமத்தில் அரசு உதவி பெறும் துவக்க பள்ளி செயல்படுகிறது. இங்கு பாண்டூர் பகுதியை சேர்ந்த சசிகுமார் என்ற ஜெயச்செல்வன், 50, இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்தார்.நேற்று வழக்கம் போல பள்ளிக்கு சென்றவர் வகுப்பு நடத்தி விட்டு இடைவேளையின் போது வகுப்பறையில் அமர்ந்து உணவு அருந்தினார்.அப்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.சக ஆசிரியர்கள் அவரை மீட்டு திருவள்ளுர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அவரை பரிசோதித்த மருத்துவர், அவர் உயிரிழந்ததாக தெரிவித்தார்.திருவள்ளூர் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ