மேலும் செய்திகள்
சுத்தமான குடிநீர் வழங்க முடியாத அரசு
11 hour(s) ago
100 நாள் வேலைக்கு கட்டிங் :கலெக்டர் அலுவலகத்தில் மனு
11 hour(s) ago
பவானியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
29-Dec-2025
கடம்பத்துார், கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது மப்பேடு ஊராட்சி. தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த ஊராட்சியிலிருந்து பேரம்பாக்கம் செல்லும் நெடுஞ்சாலையோரம் உள்ள வணிக வளாகங்களிலிருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல கால்வாய் வசதி இல்லாததால் அப்பகுதியில் சாலையோரம் சிறு குளம் போல் கழிவுநீர் தேங்கியுள்ளது.இதனால் ஏற்படும் துார்நாற்றத்தால் இவ்வழியே அரசு, தனியார், பள்ளி, கல்லுாரி, பேருந்துகள் மற்றும் இவ்வழியே செல்லும் பகுதிவாசிகள் மற்றும் மாணவ, மாணவியர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.குறிப்பாக இரு சக்கர வாகனங்கள் மற்றும் நடந்து செல்வோர் சிரமப்பட்டு வருகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மப்பேடு ஊராட்சியில் ஆய்வு செய்து சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
11 hour(s) ago
11 hour(s) ago
29-Dec-2025