உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு 40 அடி 10 ஆக மாறிய அவலம்

நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு 40 அடி 10 ஆக மாறிய அவலம்

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி தாமரை ஏரியின் உபரி நீர், பிரித்வி நகர் எதிரே உள்ள கலங்கல் வழியாக, ஜி.என்.டி., சாலையோரம் நேராக செல்கிறது. அது கோட்டக்கரை சந்திப்பில் உள்ள திருமண மண்டபம் எதிரே உள்ள உபரி நீர் கால்வாயில், ரெட்டம்பேடு சாலை வழியாக அடுத்தடுத்து உள்ள ஏரிகளுக்கு செல்கிறது.இதில், கோட்டக்கரை முதல் ரெட்டம்பேடு வரையிலான கால்வாயோரம், ஏராளமான ஆக்கிரமிப்பு கட்டடங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதனால், 40 அடி அகலம் இருக்க வேண்டிய கால்வாய், ஆக்கிரமிப்புகளால் வெகுவாக சுருங்கி, தற்போது, 10 அடி அகலம் மட்டுமே எஞ்சிஉள்ளது.இந்த ஆக்கிரமிப்புகளால், மழை காலங்களில் அந்த கால்வாய் வழியாக உபரி நீர் எளிதாக கடந்து செல்ல முடியாமல், அதை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகள் முழுதும் கழிவுநீருடன் கலந்த மழைநீர் தேங்குகிறது.இதனால் மக்களின் சுகாதாரம் மட்டுமின்றி, அவர்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது. நீர்வளத்துறையினர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, மழைக்கு முன் ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாயை ஆழப்படுத்தி, விரிவாக்கம் செய்ய வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை