மேலும் செய்திகள்
தி.மு.க., நிர்வாகி பதவி நீக்கம்
8 hour(s) ago
சாலையோரம் மண் குவியல் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
8 hour(s) ago
வாலிபர் வெட்டிக்கொலை மர்ம நபர்கள் வெறிச்செயல்
8 hour(s) ago
திருவாலங்காடு: சென்னை -- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருவள்ளூர் அடுத்து அமைந்துள்ளது நாராயணபுரம் கிராமம். இங்கு கொசஸ்தலையாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள உயர்மட்டப்பால சாலையில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. தினமும் திருவள்ளூர், சென்னை, திருத்தணி, திருப்பதி என பல்வேறு நகரங்களுக்கு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் இச்சாலை வழியாக செல்கின்றன. இந்நிலையில் சாலையின் உயர்மட்ட பாலம் நடுவே பல்லாங்குழி போன்று பள்ளம் ஏற்பட்டு உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து உள்ளனர். குறிப்பாக இச்சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் அதிகம் அவர்கள் இந்த பள்ளத்தால் தாமாக விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளதாக புலம்புகின்றனர். இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் மெத்தனமாக செயல்படுவதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.உயரதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago